Himachal pradesh : நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மோடி நிவாரணம் அறிவிப்பு.!

Advertisements

இமாச்சல;ப் பிரதேசத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் அருகே பலூர்காட்டில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையக் கடவுளிடம் வேண்டிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *