பழைமையான பெட்ரோல் வண்டிகளையும் , டீசல் வண்டிகளையும் சாலையில் இயக்கக் தடை

தில்லியில் 15 ஆண்டுப் பழைமையான பெட்ரோல் வண்டிகளையும் பத்தாண்டுப் பழைமையான டீசல் வண்டிகளையும் சாலையில் இயக்கக் கூடாது என்கிற விதி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தில்லியில் வாகனப் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களையும், 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களையும் சாலையில் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் தடை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தடையை நடைமுறைப்படுத்தப் போக்குவரத்துத் துறை, எரிபொருள் விற்பனை நிலையங்கள், காவல்துறை ஆகியவற்றின் சார்பில் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுப் பழைமையான பெட்ரோல் வண்டிகளுக்கும் பத்தாண்டுப் பழைமையான டீசல் வண்டிகளுக்கும் எரிபொருள் வழங்கப்படாது என்று கூறி நகரில் உள்ள அனைத்துப் பெட்ரோல் நிலையங்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைப் பார்க்க ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் ஒரு காவலர் நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *