
இந்தியக் கடற்படைக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தாமல் கப்பலைப் படையில் சேர்க்கும் விழா ரஷ்யாவின் கலினின்கிராடு கடற்படைத் தளத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியக் கடற்படைக்காக ரஷ்யாவின் கலினின்கிராடு யந்தர் கப்பல்கட்டும் தளத்தில் தாமல் என்னும் பெயர் கொண்ட போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகளை ஏவும் தளம், நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிப்பதற்கான வசதிகள், ஹெலிகாப்டர்களையும் சிறிய போர் விமானங்களையும் நிறுத்தும் தளம் ஆகியவற்றை இந்தத் தாமல் போர்க்கப்பல் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் கலினின்கிராடு கடற்படைக்கப்பலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாமல் போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இன்று இணைக்கப்பட உள்ளது. இதில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


