கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
காற்று மாசு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி தலைமை செயலகத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் மற்றும் தொடர்புடைய அனைத்து துறைகளை சேர்ந்த பிற அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.காற்று மாசால், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காலை நடைப்பயிற்சி செல்வோர் பலரும் கூறும்போது, காற்று மாசை கட்டுப்படுத்த நாம் ஏதேனும் செய்ய வேண்டும்.
தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்கும்போது, மக்களின் வாழ்நாள் 14 ஆண்டுகள் குறைந்து விடும். காற்று மாசை குறைக்க, டீசல் வாகனங்கள் முன்பே தடை செய்யப்பட்டு விட்டன.வேறு சில நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பது அதிகரித்து காணப்படுகிறது. அது விவசாயிகளின் தவறல்ல. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாசிப்பதில் கடினம், கண்களில் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.