Advertisements

பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் முதல்வர் விஜய், முதலில் தனது கட்சியினருக்குத் தனிமனித ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுபினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் மற்றும் திருவைகுண்டம் தவெக நிர்வாகிகளால், பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுபினர் கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.
சினிமா பாணியில் சிறப்புப் படைகளைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தனிமனித ஒழுக்கம் குறித்து பாடம் நடத்திய முதலமைச்சர் விஜய், முதலில் தனது கட்சியினருக்கு அந்த ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுபினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Advertisements


