
தில்லி நாடாளுமன்றத்தில் நடப்பாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் இன்று தொடங்குகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில், தில்லி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா்.
இதைத்தொடர்ந்து, மத்திய பட்ஜெட்டை தொடா்ந்து 9-ஆவது முறையாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளாா். அடுத்த நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.
இதனிடையே, பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் , வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுத்ததையடுத்து மத்திய அரசு இதனை நிராகரித்துவிட்டது.




