Darshana Singh: இந்தியா வல்லரசு நாடக மாற உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்!

Advertisements

பாரத பிரதமர் மோடி ஒரு சபதம் எடுத்துக் கொண்டு இருக்கிறார், அமெரிக்கா, இங்கிலாந்து போல இந்தியா வல்லரசு நாடக மாற்ற வேண்டும் என்பதே  அதற்காக நாம் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் உத்தரப்பிரதேச ராஜ்ய சபா எம்பி  தக்‌ஷ்ணா சிங் தெரிவித்தார்.

திமிரி அருகே  மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில்  உத்தரப்பிரதேச ராஜ்ய சபா எம்பி தக்‌ஷ்ணா சிங்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உத்தரப்பிரதேச ராஜ்ய சபா எம்.பி  தக்‌ஷ்ணா சிங் கலந்து கொண்டு  இந்தியன் வங்கி ஊரக சுழ வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் சணல் பைத்தயாரிக்க பயிற்சி முடித்த  பெண்களுக்கு வங்கி  கணக்குப் புத்தகம் மற்றும் சான்றிதழ்  வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அவர்  பேசியதாவது.காசி தமிழ் சங்க நிகழ்ச்சியின் மூலம் தமிழ் கலாச்சாரத்தை உலகமே  பெருமைப்படுத்தும் வகையில் அமைத்துத் தந்த பாரத பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த நமது லட்சியம் வளர்ச்சியடைந்த வாகனத்தின் முக்கிய நோக்கமே மத்திய அரசின் திட்டக் குறித்து மக்கள் தெரிந்துக் கொண்டு அத்திட்டங்களில் பயனடைய வேண்டும் என்பதே மேலும் 2047 ல் பாரத பிரதமர் ஒரு சபதம் எடுத்துக் கொண்டு இருக்கிறார் அமெரிக்கா, இங்கிலாந்து போல வல்லரசு நாடக மாற்ற வேண்டும் என்பதே  அதற்காக நாம் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுகீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  இந்தப் பாளையம் கிராமத்தில் பாரத பிரதம இத்திட்டத்தில் அனைத்து வீடுகளில் கழிவறை மற்றும் குடிநீர் இணைப்பு பெற்று மாதிரி கிராமமாக இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகப் பேசினார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து அனைவரும் இந்தியா வல்லரசு நாடக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இறுதியாக இந்திய உர கட்டுபாட்டு துறையின் மூலம் வேளாண் துறை எளிமையாக மருந்து தெளிப்பது குறித்து பொது மக்களுக்குச் செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் இந்திய அஞ்சல் துறையின் மூலம் அமைக்கப்பட்ட ஆதார் முகாம், விபத்துக் காப்பீடு முகாம்மூலம் தங்களை இனைத்துக் கொண்டு ஏராளமான பொது மக்கள்  பயனடைந்தனர். இதில் பாஜக மாவட்ட தலைவர் விஜியன், ஊராட்சி தலைவர் அமுதா சேகரன், மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர்கள் வரதன், குணாநிதி, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *