Republic Day Curbs: விமானங்களுக்குத் தடை!

புதுடில்லி: குடியரசுத் தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதிவரை காலை 10:20 மணி முதல் நண்பகல் 12:45 மணிவரை டில்லியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும், கிளம்புவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில் இந்த உத்தரவு விமானப்படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை சார்பில் இயக்கப்படும் விமானங்கள், மாநில கவர்னர் மற்றும் முதல்வர் செல்லும் விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

வரும் 26ம் தேதி குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். இதனையடுத்து டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வரும் 26ம் தேதிவரை காலை 10:45 மணி முதல் நண்பகல் 12:45 மணிவரை டில்லி விமான நிலையத்தில் விமானங்கள் கிளம்புவதற்கும், தரையிறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இந்த உத்தரவு விமானப்படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை சார்பில் இயக்கப்படும் விமானங்கள், மாநில கவர்னர் மற்றும் முதல்வர் செல்லும் விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டில்லியில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *