Darshan:இளைஞர் கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் கைது!

Advertisements
Advertisements

ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:பிரபல கன்னட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மைசூருவில் நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை வழக்கு தொடர்பாகச் சிலரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.

நடிகர், கொலையில் நேரடியாக ஈடுபட்டாரா அல்லது மறைமுகமாக ஏதேனும் செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதையடுத்து தர்ஷனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இறப்பதற்கு முன்பு, ரேணுகா சுவாமி சமூக ஊடகப் பதிவில் ஒரு நடிகைக்கு எதிராகச் சில இழிவான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *