Tamilnadu Weather : தமிழகத்தில் இயல்பை விடவெப்பநிலை அதிகரிக்க கூடும்!

தமிழகத்தில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். இதனால் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் வேலுார், திருச்சியில்  39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *