குர்குரே வாங்க மறந்ததால் கணவரைப் பிரிந்த மனைவி!

Advertisements

குர்குரே மீது இருந்த அதீத நாட்டமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாகக் குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாகக் குர்குரே தயாராஅரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாகக் குர்குரே தயாராகிறதுகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் இன்றளவும் குர்குரே அதிகம் விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் குர்குரே வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே சாப்பிடுவதில் அதீத நாட்டம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட குர்குரேவுக்கு அடிமையான அப்பெண் தனக்கு தினமும் ஒரு பாக்கெட் குர்குரே வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காகக் குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார். இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு அப்பெண் வெளியேறியுள்ளார்.

பின்னர் காவல் நிலையத்துக்குச் சென்ற அப்பெண் , தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக முறையிட்டுள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு குர்குரே மீது இருந்த அதீத நாட்டமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *