Wine shop: மதுக்கடைகள் அடைப்பு!

Advertisements

செப்.22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் எனப் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி, காமராஜ் சாலை உள்ளிட்ட வழிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பல இடங்களில் சாலைகளில் விநாயகர் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிலைகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அப்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற கூடாது என மதுக்கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *