
பாஜக மற்றும் அதிமுக மீண்டும் கூட்டணி சேர ஜி கே வாசன் முயற்சி எடுத்து வந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேராது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை: ராயபுரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு தலைமை வகித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார், எம்ஜிஆர் குறித்து ஆ ராசா தெரிவித்த கருத்துகுறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, எங்கள் பொது செயலாளர் சார்பிலும் எங்கள் சார்பிலும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு ஈனப்பிறவியெனக் கடுமையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகளைத் தேர்தல் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிக்குழு சார்பில் பல்வேறு கருத்துகளைப் பெற்று தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த நிலையில் சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு என்பது எந்தவித முக்கியத்துவமும் இல்லாதது. அவர்கள் இருநாட்டு அதிபர்கள் கிடையாது. அவர்களது சந்திப்பைப் பெரிதாக ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. ஜி கே வாசன் பாஜக தேசிய தலைவர் ஜேப்பி நட்டா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து அதிமுக – பாஜக உடனான கூட்டணியை மீண்டும் ஏற்படுத்த முயற்சி எடுத்து வருவது குறித்து செய்தியாளர் எழுதிய கேள்விக்கு,
அவர் இருவருடனும் நட்போடு இருக்கிறார்.பாஜகவுடன் நாங்கள் கூட்டணி சேர மாட்டோம் முன்பு பாஜகவுடன் தோழமையோடு தான் இருந்தோம் ஆனால் எங்கள் தலைவர்கள்குறித்து தவறாகப் பேசியபிறகு பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டோம். நாங்கள் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்குக் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக நடவடிக்கை எடுத்து வருகிறது.திமுக பாஜக தவிர மற்ற எந்தக் கட்சிகளோடு வேண்டுமானாலும் அதிமுக கூட்டணி அமைக்கும். தேர்தல் வருவதற்கு ஒரு மாத காலம் இருக்கும் சூழலில் இப்பொழுதே தேர்தல் கூட்டணிகுறித்து தேவை இல்லை. இறுதி நேரத்தில் கூடக் கூட்டணி மாற்றங்கள் இருக்கும்.ஆகவே திமுக தொகுதி பங்கிட்டு வருவதால் எந்தப் பயனும் கிடையாது என்று தெரிவித்தார்.


