
பல்லடம் அருகே அடுத்தடுத்து இரண்டு மெடிக்கல் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.42000 கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த ஆறுமுத்தாம்பாளையத்தில் சிவா என்பவர் அன்னம் என்ற பெயரில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் இன்று காலைக் கடையைத் திறக்க வந்தபோது கடையில் இருந்த இரண்டு பூட்டுகளும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது கடையினுள் வைக்கப்பட்டிருந்த ரூ.40,000 திருடு போனது தெரியவந்தது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் 63வேலம்பாளையம்-சின்னக்கரை சாலையில் செயல்பட்டு வரும் பிரசாத் என்பவருக்குச் சொந்தமான விநாயகா மெடிக்கலின் பூட்டை உடைத்து ரூ 2000 திருடியுள்ளனர்.
இது தொடர்பாகப் பல்லடம் போலீசார் தவிர விசாரணை நடத்தி வருகன்றனர்.பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் இரு வேறு மெடிக்கல் கடைகளின் பூட்டை உடைத்து ரூ 42000 திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

