தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு !

இன்று கனமழை காரணமாகத் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சிவகங்கை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ள நிலையில், நவம்பர் 28-ம் தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *