
மோந்தா’ புயல் தீவிர புயலாக மாறி, ஆந்திராவில் கரையைக் கடக்க வாய்ப்புள்ள நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை செய்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, இன்று மாலை அல்லது இரவு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, திருப்பதி, பிரகாசம், கோனசீமா, அனகாபள்ளி, ராஜமஹேந்திரவரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு மாநில பேரிடர் மீட்புப் படை குழுவை அரசு நிலைநிறுத்தியுள்ளது. இதனிடையே, சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, புயல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

