
தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோவிலில் 3 இலவச திருமணத்தை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் நடத்தி வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் ஏழை எளிய பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வகையில் ரூபாய் 2 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பத்தினருக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இந்து கோயில்களில் அரசின் சார்பில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்களுடன் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் நடத்தி வைத்ததுடன் அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் உட்பட கோவில் ஊழியர்கள் மணமகன், மணமகள் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .




