
சென்னை:
சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம், ஐபோன்கள் கடத்தப்பட்டுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதேநேரம் சுங்கச் சோதனை இல்லாமல் சில அதிகாரிகள் உதவியுடன் கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லப்பட இருப்பதாகவும் ரகசிய தகவலில் கூறினார்கள்.
இதை உறுதி செய்த தனிப்படை அதிகாரிகள் சோதித்தபோது 13 பேர் சோதனை இல்லாமல் வெளியே அனுப்பினார்கள் சில சுங்க அதிகாகிள்.. அவர்கள் நான்கு பேரும் உண்மை என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமானத்தில் தினசரி 100க்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. மிகவும் பிஸியான சர்வதேச விமான நிலையமான சென்னைக்கு, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் செல்கின்றன.
இதேபோல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் வெளிநாட்டு விமானங்களிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவார்கள்.
ஏனெனில் வரி கட்டுவதை தவிர்க்கும் பொருட்டு, தங்கம், ஐபோன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கடத்தி வருகிறார்கள். இதேபோல் சில நேரங்களில் கஞ்சா உள்ளிட்டவற்றையும் சட்டவிரோதமாகக் கடத்தி வருகிறார்கள்.
இதைத் தடுக்கும் பொருட்டு விமான நிலையங்களில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடத்துவார்கள்.
ஆனால் சில பயணிகள் சுங்கத்துறை அதிகாரிகளின் துணையுடன் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன்கள் கடத்தி செல்வது அவ்வப்போது நடக்கிறது.
அப்படித்தான் சுங்கச் சோதனை இல்லாமல் சில அதிகாரிகள் உதவியுடன் கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லப்பட இருப்பதாகவும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை அதிகாரிகள், சாதாரண உடையில் சென்னை விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நின்று கண்காணித்தனர்.
அப்போது துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 2 விமானங்களில் வந்த பயணிகள் வெளியில் வந்து கொண்டு இருந்தனர். தனிப்படை அதிகாரிகள், வெளியே வந்த 13 பயணிகளைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, விசாரித்துள்ளனர்.
பின்னர் அவர்களது உடைமைகளையும் சோதனையும் செய்தனர். குறிப்பிட்ட 13 பயணிகளும், நாங்கள் ஏற்கனவே விமான நிலையத்துக்குள், சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு தான் வெளியில் வருகிறோம்.
நீங்கள் வெளியில் நின்று கொண்டு எப்படி எங்களை மீண்டும் சோதிப்பீர்கள்? என்று கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 13 பயணிகளிடமும் சுமார் ரூ.1.50 கோடி மதிப்புடைய 2 கிலோவுக்கும் மேற்பட்ட தங்க பசைகள் மற்றும் ஐபோன்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். ஐபோன்களுக்கு சுங்க வரி விதித்தனர். மேலும் 13 பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் சிலரின் உதவியுடன் சுங்கச் சோதனை இல்லாமல் பயணிகள் சிலர் கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 13 பயணிகளிடம், சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று, உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகாவில் எஸ்பியாகப் பணியில் இருந்த பரமானந்த் ஜா, சரவணன், சுனில் தேவ் சிங்க், டல்ஜெட் சிங் ஆகிய 4 அதிகாரிகள் விமான நிலையத்தின் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை கடற்கரை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்துக்குக் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
மேலும் இந்த 4 அதிகாரிகள்மீதும், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
