
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ ரேஸில் பங்கேற்றுள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.
