Tiruppur: “ஆற்றில் உலா வரும் முதலை” பொதுமக்கள் பீதி!

Advertisements

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து அலங்கியம் வழியாகப் பழனி செல்லும் சாலையில் உள்ளது சீத்தக்காடு.

இங்குள்ள அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் இப்பகுதியில் பழமையான சங்கிலி கருப்பன் சுவாமி கோயில்அமைந்துள்ளதால் பக்தர்களின் வருகை இருக்கும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கற்களால் ஆன பழமையான தடுப்பணை உள்ளதால் விவசாயிகளும் தொழிலாளர்களும் அதன் கரையில் நடந்து அக்கரைக்கு சென்று விவசாயபணிகளை கவனிப்பது வழக்கம்.

இந்நிலையில் அமராவதி அணையிலிருந்து தப்பிவந்த 4 முதலைகள் இப்பகுதியில் நடமாடி வருகின்றன. கடந்த 7 வருடங்களாக. 4 முதலைகள் பிடிபடாமல் இருந்தது.

இந்நிலையில் தடுப்பணை நடுவே உள்ள பாறைமீது 8,அடி நீள முதலை படுத்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளிக்க வந்த பொது மக்களும் தொழிலாளர்களும், மீன வர்களும் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர்.

அவர்களின் சத்தத்தைக் கேட்டுப் பாறையில் படுத்து இருந்த முதலை மீண்டும் தண்ணீருக்குள் மறைந்தது. முதலையைப் பிடித்துச் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண் டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *