Australian Young Woman: ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட இளம் பெண்!

இந்தியாவின் பாரம்பரிய கலையான தியானம். யோகாசனத்தால் ஈர்கப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த  இளம் பெண் ஜோர்டி மூர் நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் ஆன்மீக  நடைப்பயணத்தில் இன்று திருத்தணிக்கு வருகை தந்தார்.

இந்தியாவின் பாரம்பரிய கலையான தியானம். யோகாசனத்தால்  ஈர்கப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த  இளம் பெண் ஜோர்டி மூர் நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் ஆன்மீக நடைப்பயணத்தில் இன்று திருத்தணிக்கு வருகை தந்தார். அவருக்குப் பீகாக் மருத்துவமனை தலைவர்  டாக்டர் ஸ்ரீ கிரண் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜோர்டி மூர்  பேசுகையில்… ஆஸ்திலேரியாவில்  தியானம், யோகாசனம் பயிற்சி பெற்றபோது ஆதி சங்கராச்சாரியாரின் தத்துவ சன்மார்கத்தால் கவரப்பட்டு இந்தியாவின் தத்துவம், பாரம்பரிய கலாச்சாரம், நாகரீகம், அறிந்துக்கொள்ள நாடு முழுவதும் 6,400 கிலோ மீட்டர் நெடும் தூரம் நடை பயணத்தில்  பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் 4 மடங்களுக்கு 6 முதல் 8 மாத காலத்தில் செல்லத் திட்டமிட்டு கடந்த மாதம் ஒடிசா மாநிலம் பூரியில் தனது பயணத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.

தனது பயணத்தில்  ஆதிசங்கராச்சாரியார் பிறந்த கேரளா மாநிலம் காலடி, காஞ்சிபுரம், ஸ்ரீங்கேரி, பத்ரிநாத் மடங்களுக்குச் சென்று இறுதியில் பத்ரிநாத்தில்  தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். தனது பயணத்தின் மூலம் ஆதி சங்கராச்சாரியாரின் தத்துவம், சன்மார்கம் தொடர்பாக முழுமையாகத் தெரிந்துக்கொண்டு இந்தியா மக்களுக்கு ஆன்மீக பாதையை நோக்கிச் செல்லவும், யோகாசனம், இசையில் முழுமையாகத் தங்களை ஈடுபடித்துக்கொண்டு  மகிழ்ச்சி நிறைந்த  வாழ்வுக்கு  ஊக்கப்படுத்த பாடுபடுவதே பாத யாத்திரையின் நோக்கம் என்று தெரிவித்தார். தினமும் 25 முதல் 30 கி, மீத்தூரம் நடைப்பயணம்  மேற்கொள்வதாகவும், பழங்கள் மட்டுமே உணவாக உட்கொள்வதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *