Crime: சூட்கேஸில் 4 வயது சிறுவனின் சடலம்!

Advertisements

4 வயது மகனைக் கொலை செய்து சடலத்தைச் சூட்கேஸில் அடைத்துக் காரில் பெங்களூருவுக்கு கொண்டு வந்த தனியார் நிறுவன பெண் அதிகாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் Minfful Al Lab நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றி வருபவர் சுச்சனா சேத்(39). இவர் கடந்த 6ம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையைக் காலி செய்துவிட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார்.

அப்போது அந்தப் பெண் தங்கியிருந்த ஒட்டல் அறையை ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டல் நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பிச் செல்லும்போது மகனை அழைத்துச் செல்லவில்லை என்பது உறுதியானது.

மேலும், சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை காரைத் தயார் செய்து கொடுக்கும்படி ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டதை அடுத்து தயார் செய்து கொடுத்துள்ளார். அதன்படி வந்த டாக்சியில் சுசனா சேத் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்துச் சென்ற காட்சிகளையும் பார்த்துப் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். பின்னர், ஓட்டுநரைக் காவல் நிலையத்திற்கு காரைக் கொண்டு செல்லுமாறு கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு காரை ஓட்டிச் சென்றார்.

அங்குக் கோவா போலீசார் கூறியபடி, காரைப் போலீசார் சோதனை செய்தபோது காரில் இருந்த சூட்கேஸை சோதனை செய்தபோது அவரது மகனின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சுச்சனா சேத்தை கைது செய்தனர். சுச்சனா சேத் எதற்காகத் தனது மகனைக் கொன்றார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *