கடுமையான வலியில் ஒரு பெண் கண்ணீர்விட்டு பேசியதை இப்படி விமர்சிப்பதா? என்று அமைச்சர் ராஜ்மோகன் வினவியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரையின்போது நேரம் கருதி சுருக்கமாக பேசுங்கள் என்று மட்டும்தான் சத்யபாமாவிடம் கூறியதாக தெரிவித்தார்.
அரசியல் காரணத்திற்காக ஆதாரமின்றி பேசக்கூடாது என்று கூறினார். கடுமையான வலியில் ஒரு பெண் கண்ணீர்விட்டு பேசியதை இப்படி விமர்சிப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் உள்ளிட்டோர் நிகழ்வுகளில் தொகுப்பாளராக இருந்தபோதும் இதேபோல் சுருக்கமாக பேசுங்கள் என கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
யாரும் யாரையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை, நல்ல தலைமையின் கீழ் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் கருத்து கேட்டு அதனடிப்படைியில் இறுதி முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.


