வரி குறைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்..!

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலில், துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், மாலை மற்றும் சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவரும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வேலுநாச்சியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரிவிதிப்பு குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், 50 சதவீதம் வரியிலிருந்து தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை, தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். பின்னர் . மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *