தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாகக் கனமழை கொட்டிவரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாகத் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் காற்று வீசும் வேகம் அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் இயக்கப்படும் நேர இடைவெளி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் ரெயில்வே தண்டவாளத்தை வெள்ளம் மூழ்கடித்தது. கனமழை தொடர்வதால் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி உள்ளது.