
வாழப்பாடியில் போலீசார் ரோந்து பணியின்போது காரைச் சாலை ஓரம் நிறுத்திவிட்டு காரில் இருந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.மேலும் காரைச் சோதனை செய்தபோது புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்ததால் போலீசார் கார் மற்றும் 20 கேஷ் மதுபாட்டில் பறிமுதல் செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது நள்ளிரவு ஒரு மணி அளவில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பாளையம் என்ற இடத்தில் போலீசாரின் வாகனம் சென்றபொழுது பாண்டிச்சேரியிலிருந்து வாழப்பாடிக்கு மது பாட்டில்களை கடத்தி வந்த சொகுசு கார் காவல்துறையினரை கண்டவுடன் காரைச் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காரில் வந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சொகுசு காரைச் சோதனை செய்து பொழுது பாண்டிச்சேரியிலிருந்து 20 கேஷ் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து காரைப் பறிமுதல் செய்து போலீசார் காரில் இருந்த 20 கேஸ் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட மதுபாட்டல்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


