
வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் தொடர் போராட்டத்தால் ஓமலூர் சுற்று வட்டார பொதுமக்களுக்குப் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தின் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல்,
வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அரசு பணிகளைபுறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்தப் போராட்டத்தின் விளைவாக ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும்பாலான இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ஓமலூர் சுற்று வட்டார பொதுமக்களுக்குப் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ள நிலையில், பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக வருவாய்த்துறை அலுவலகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

