நாடு முழுவதும் ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.!

நாடு முழுவதும் இன்று முதல் இந்திய ரயில் கட்டணம் உயரும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், இன்று முதல் இந்திய இரயில்வேயின் பயணக் கட்டணங்கள் உயரும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு காசு வீதமும், குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால், இன்று முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் புதிய கட்டணம் பொருந்தும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *