Corona Virus In Kerala: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

Advertisements

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 230 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ துவங்கி மக்களை பாடாய் படுத்தி வந்தது. அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மேலும் மாநிலங்கள், நாடுகள் இடையேயான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலர் வேலையை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது சற்று குறைந்து, மக்கள் வாழ்க்கை நிலை சகஜமாகியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 230 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கேரளாவில் சபரிமலை சீசன் துவங்கி உள்ளதால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிக அளவு பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.

நாளொன்றுக்கு 90 ஆயிரம் பேரை சபரிமலையில் தரிசனத்திற்காக புக் செய்துள்ளனர். இதில் 65-70 ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசிக்க முடிகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கேரளாவில் இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிக அளவு குவிந்துள்ள நிலையில், மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *