சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை!

Advertisements

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இது இரவு முழுவதும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், அடையாறு, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கிண்டி, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிவரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் மற்றும் வேலைக்குச் செல்வோர் மழையில் நனைந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *