LPG Cylinder Price: சிலிண்டர் விலை உயர்வு.. வீட்டு சமையல் கேஸ் விலை இது தான்…!

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள், உள்நாட்டு சமையல் எரிவாயு விலைகளில் பிரதிபலித்து வருகின்றன.

இந்த நிலையை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு எண்ணெய் சந்தை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பிப்ரவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது,சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1,899 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மூலப்பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்திருக்கும் நிலையில், எரிவாயு செலவும் அதிகரிப்பது வணிகச் செயல்பாடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கிடையே, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விலை உயர்வு வணிக பயன்பாட்டிற்கே எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *