ஆன்ட்ரியா நடிப்பில் உருவான “கா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கா’. காடுகளுக்குள் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தில் சலீம் கவுஸ் , மாரிமுத்து , கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார்.

திரில்லராக வெளியாக இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் 29-ஆம் தேதியில் இந்த படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *