Cockfight: படு ஜோராக நடந்த சேவல்சண்டை சூதாட்டம்!

எரியோடு:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின் பேரில் வடமதுரை, எரியோடு போலீசார் இதுகுறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று எரியோடு கோவிலூர் பகுதியில் பண்ணைக்குளம் என்ற இடத்தில் சேவல் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்குச் சூதாட்டத்தில் ஈடுபட்ட கோவிலூரை சேர்ந்த பெருமாள், திருமுருகன், குஜிலியம்பாறையை சேர்ந்த காளிமுத்து, நடராஜன், கோம்பையை சேர்ந்த தேவராஜ், தவசிமடையை சேர்ந்த தங்கபாண்டியன், மணப்பாறையை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய 8 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரம் ரொக்கப்பணம், 2 சேவல்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதி பெறாமல் சேவல்களை வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *