Chief Minister M.K. Stalin: ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின் பாராட்டு!

Advertisements

பல்கலைக்கழக வேந்தராக முதல் -அமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா இன்று (நவ.21) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது விழாவில்  பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசிய  முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இதுதான்

 

ஜெயலலிதா வேந்தராகத் தன்னையே நியமித்துக் கொண்டதை நான் மனதார பாராட்டுகிறேன். முதல்-அமைச்சர் வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா. முதல்-அமைச்சர் பலகலைக்கழக வேந்தராக இருப்பதால் மக்கள் நினைப்பதை செய்ய முடிகிறது. பல்கலைக்கழகங்களுக்கு முதல்-அமைச்சர் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இதுதான். பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. நமது சட்ட போராட்டத்திற்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்” என்றார்.

விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ.சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா  கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான செளமியா மேற்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *