“வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது” – முதல்வர் விஜய் தரப்பு விளக்கம்!

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என முதலமைச்சர் விஜய் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என அவர் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் செலவு கணக்கை மறைத்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாகவும் கூறப்படும் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என்றும் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *