
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி கோவை அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக விளையாடிய சுரேஷ் லோகேஷ்குமார் 66 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 15 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம், கோவை அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது.


