ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன் மேஜையில் உள்ளது – CM விஜய் ஆவேசம்.!

Advertisements
முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன் மேஜையில் உள்ளது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி பேசியபோது, வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக தான் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, அலுவலர்கள் தவறு செய்வதால் திட்டத்தை நிறுத்தக்கூடாது என்று தெரிவித்தார். கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கான இழப்பை குறைக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசியபோது, முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்துள்ளதாகவும் ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன் மேஜையில் உள்ளது என்றும் கூறினார். மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி பேசியபோது, தான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் தன்னை 7 முறை வெல்ல வைத்துள்ளதாத் தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *