
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 470 கோடி ரூபாய் மதிப்பிட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் உரையாற்றினார். அப்போது, பெரம்பூரில் 300 கோடி ரூபாயில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
351 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்றும் 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை என்றும் ஆவின் பால் கொள்முதல் விலையை 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 470 கோடி ரூபாயில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.




