தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் கூட்டதை திசை திருப்ப அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு! முதல்வர் ஸ்டாலின் குற்றாச்சாட்டு!

சென்னை: தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் கூட்டதை திசை திருப்ப பாஜ., முயற்சிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெங்களூருவில், 2வது எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, செல்லும் முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாட்னாவில் கூடி முக்கிய முடிவுகளை எடுத்தோம். எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்ப பாஜ., முயற்சிக்கிறது. பாஜ., எரிச்சல் அடைந்திருப்பதன் விளைவுதான், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது.

பாஜ.,வை வீழ்த்த பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறேன். தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் கூட்டதை திசை திருப்ப பாஜ., முயற்சிக்கிறது. அமலாக்காத்துறை சோதனையை கண்டு திமுக பயப்படாது. 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெறாத அமலாக்கத்துறை சோதனை தற்போது ஏன்?.

பெங்களூருவில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளன. வடமாநிலங்களில் நடந்த சோதனை தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளது; அமலாக்கத்துறை சோதனை கண்டு கவலைப்படவில்லை. பாஜ.,வின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *