Today Gold Rate In Chennai: எகிறும் தங்கம்.. பதறும் நகைப்பிரியர்கள்..எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

Advertisements

தங்கம் விலை சரசரவெனக் குறைய தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள்மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. சவரன்ரூ.51,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,445-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 12) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,925-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,400-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.87,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *