
இ.ந்.தி.யா (I.N.D.I.A) கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம்மூலம் மும்பை செல்கிறார்…
புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிராகக் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம்மூலம் மும்பை செல்கிறார்.பின்னர் அங்கு நடைபெறும் கூடத்தில் பங்கேற்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

