R. Kamalakannan: பேச்சுவார்த்தை சரி இல்லை என்றால் போராட்டம்!

Advertisements

வரும் 7 ஆம் தேதி பேச்சு வார்த்தை சுமூகமான நிலை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு செய்வோம் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

அண்ணா ஓட்டுனர்கள் சங்கத்தினருக்கு கிளாம்பாக்கம் மத்திய பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ ஓட்டுநர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மற்றும் ஆட்டோ வாகன ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் ராசு தலைமையிலும், பேரவை செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது,அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ இயக்க 250 கார்டுகள் வழங்கப்பட்டன அதை இன்று அந்த பகுதியை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினோம்.

ஐந்தாயிரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச உடல் பரிசோதனை மற்றும் அதற்கான அனைத்து மருத்துவத்தையும் தனியார் மருத்துவமனை ஏற்றுக் கொண்டிருக்கிறது அதனை அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் துவக்கி வைக்க உள்ளார்.

கடந்த ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் எங்களுடன் இணைந்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய டி ஏ நிலுவை வழங்க வேண்டும் என்று இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தோம்.

வேலை நிறுத்தத்தின் போது அரசின் தூண்டுதல் பேரில் ஒரு நபர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் நீதிபதி பொங்கல் திருநாளை முன்னிட்டு போராட்டத்தை ஒத்தி வைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார் பொங்கலுக்கு பின் அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு உங்கள் கோரிக்கைகளை முன் வையுங்கள் என்றார்.

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருந்தது போலவே தான் இப்போதும் உள்ளது எந்த கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை.அமைச்சரங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்து வருகிறார். ஆனால், 3400 பேர் வாரிசு வேலைக்கு பதிவு செய்துள்ளோம் அமைச்சர் 43 பேருக்கு தான் கொடுத்து உள்ளார்.

போக்குவரத்து துறையில் பணியாளர்கள் தேவை 16 ஆயிரம் உள்ளது.. ஆனால் எண்ணூறு பேருக்கு தான் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது இன்னும் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. 16 ஆயிரம் பேர் இங்கு! 800 பேர் எங்கு!.

வரும் 7 ஆம் தேதி பேச்சு வார்த்தை சுமூகமான நிலை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு செய்வோம்..வரும் 7 ஆம் தேதி சரியான முடிவு வரவில்லை என்றால் பெரிய போராட்டம் நடைபெறும்.

அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்திருந்த நிலையிலும் மதுரையில் 9 பேரை பணி மாறுதல் செய்து உள்ளனர். ஒரு சில இடங்களில் ஆப்சன்ட் போட்டுள்ளனர்.

7 ஆம் தேதி தீர்ப்புக்குப்பின் போராட்டம் அறிவித்தால் போக்குவரத்து தடைபடாமல் இருக்க தனியார் ஓட்டுநர்களை இப்போதே தயார்படுத்தி வருகின்றனர் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *