
பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பெரியார் திடலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தமிழ் சமுதாயத்திற்காக 92 வயதிலும் இளைஞர் போல் ஓய்வின்றி உழைக்கிறார் கி.வீரமணி என்றும் கலைஞர், பேராசிரியருக்கு பிறகு தன்னை வழிநடத்துபவர் கி.வீரமணி என்றும் முதல்வர் பெருமையயுடன் கூறினார்.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்படுகிறது என்றும் தனது ஊதியம் மற்றும் 126 சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை சேர்த்து ஒன்றரை கோடி ரூபாயை பெரியார் உலகத்திற்கு வழங்கியது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போற்றுவது பெரியாரின் கொள்கை, திராவிட சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார். பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும் என்றும் இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள் என்றும் திராவிட மாடல் அரசு அதனை தடுத்து நிறுத்தும் என்றும் கூறினார்.


