
பயங்கரவாதத்தை உறுதியாகவும் கடுமையாகவும் ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளரிடம் பேசிய சசிதரூர், முப்பதாண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் சிக்கலாகப் பயங்கரவாதம் உள்ளதாகத் தெரிவித்தார்.
1989 – 1990ஆம் ஆண்டில் காஷ்மீரில் தொடங்கிய பயங்கரவாதம் அதன்பின் தொடர்ந்து வளர்ந்ததாகவும், மும்பை, புனே, தில்லி என்று அது பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதை உறுதியாகவும் கடுமையாகவும் ஒடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சசிதரூர் கூறினார்..


