ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஹொன்சு தீவில் உள்ள குஜி நகரில் 130 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த, நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 6.7 ஆக பதிவாகியது. இதனால், கட்டிடங்கள் அதிர்ந்ததால், அச்சமடைந்தப் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *