Advertisements
சுவையான மட்டி கறி கிரேவி செய்வது எப்படி!
கிரேவி என்றால் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதுவும் மட்டி கறி கிரேவி என்றால் எப்படி இருக்கும். மட்டி கறி கிரேவியை இட்டிலி, தோசை, சப்பாத்தி முதல் எல்லா வகையான உணவுகளுடனும் இந்த மட்டி கறி கிரேவியை சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். மட்டி கறி கிரேவி எப்படி செய்வது என்பதைதெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
வேகவைத்த மட்டி கறி – 1/2
வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
ஊப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கிரேவி செய்வது எப்படி:
முதலில் 1/2 கிலோ மட்டி கறியை எடுத்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து கறியை எடுத்துவைத்துகொள்ளவும்.
பின் வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போடவும் பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை சிறிது நேரம் மூடிவைத்து வேகவிடவும்.
பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கிய பின் சிறிது கரம் மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் கடைசியாக உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
நன்றாக கிளறிய பின் கடைசியாக வேகவைத்து எடுத்துவைத்த மட்டி கறியை சேர்த்து கிளறிவிடவும்.
மட்டி கறியை கிளறிய பின் மசாலாவுடன் ஒன்றாகும் வரை 2 நிமிடம் மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும் சுவையான சூப்பரான மட்டி கறி கிரேவி ரெடி.