கடந்த ஆண்டில் 2.22 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு – மன்சுக் மாண்டவியா.!

Advertisements

நாடு முழுவதும் மொத்தம் 2 கோடியே 22 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வேலைவாய்ப்பு தொடர்பாக  மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார். அப்போது, கடந்த ஓராண்டில் ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன என்றார்.

இதில், நாடு முழுவதும் மொத்தம் 2 கோடியே 22 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.மத்திய அரசு இதுவரை 18 வேலைவாய்ப்பு  முகாம்கள் மூலம் 11 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு வேலைகள் அரசு துறைகளில் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஓரே தளமாக தேசிய தொழில் சேவை இணையதளத்தை  அரசு உருவாக்கியுள்ளது. இதில், 6 கோடிக்கு அதிகமான வேலை தேடும இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *