Cinema: மகளை அறிமுகம் செய்யும் விளம்பரப்பட இயக்குனர்!

Advertisements

சென்னை: மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் சத்யராஜ், வசந்த் ரவி நடித்துள்ள ‘வெப்பன்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதையடுத்து எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் படம், ‘சிரோ’. இதை விளம்பரப்பட இயக்குனரும், வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் எழுதி இயக்குகிறார். பிரார்த்தனா சாப்ரியா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

படம்குறித்து விவேக் ராஜாராம் கூறியதாவதனது மகள் பிரார்த்தனாவை நடிகையாக அறிமுகம் செய்ய முன்வந்த மீனா சாப்ரியாவுக்கு நன்றி. ‘சிரோ’ என்பது கற்பனை கதாபாத்திரம். பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் தேவதை அவள். முதல்முறையாகப் பிரார்த்தனாவை நேரில் சந்தித்தபோது, இந்தக் கதாபாத்திரத்துக்கு வலுவாக நியாயம் சேர்ப்பார் என்று உணர்ந்தேன். கிஷன் சி.வி ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *