
நடிகர் அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. சினிமாவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அஜித்குமார், சமீபத்தில் கார் ரேசிங் போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
துபாயில் நடைபெற்ற சமீபத்திய கார் ரேசில், அஜித்குமாரின் அணி 3-வது இடத்தைப் பெற்றது. இந்தப் போட்டியில், அவர் கார் விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வந்துள்ளன. அதில், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.
மேலும், ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடைபெற்ற கார் ரேசிலில் அஜித்குமார் பங்கேற்றார். கடந்த சில நாட்களாகப் பயிற்சியில் ஈடுபட்ட அவர், தற்போது போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
போட்டியின்போது, ஒரு கார் திடீரென முன் வந்ததால், அஜிதின் கார் விபத்தில் சிக்கியது. இதில், அவரது கார் 3 முறை பல்டியடித்தது. அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர்தப்பினார்.
அஜித்தின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான தகவல்கள்.
