விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட சிகரெட் பறிமுதல் !

Advertisements

கோவை: 

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 1.7 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள் சுங்கவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை – ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 3.45 மணியளவில் தரையிறங்கி மீண்டும் 4.15 மணியளவில் புறப்பட்டுச் செல்லும். இன்று காலை ஷார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் பயணி ஒருவரிடமிருந்து சுங்கவரித்துறை அதிகாரிகள் ரூ 1.7 லட்சம் மதிப்பிலான பத்தாயிரம் வெளிநாட்டு ‘கோல்டு பிளாக்’ சிகரெட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *